தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள்

ஓசூர், :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சத்யாவுக்கு ஆதரவாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நேற்று முன்தினம் மாலை ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து, கூட்டணி கட்சியினர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர் பேசியதாவது:

ஓசூர் வேட்பாளர் சத்யா மகத்தான வெற்றி பெற வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது முறையாக முதல்வராக வேண்டும். 7 வது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும். ஓசூர் என்பது மிக முக்கியமான நகரம்; தொழிற்சாலைகள் நிறைந்த நகரம்.


நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வேலை பார்த்து, தி.மு.க., வேட்பாளர் சத்யாவை வெற்றி பெற செய்ய வேண்டும். முதல்வர் அறிவுறுத்தியபடி, வெல்லும் தமிழ் பெண்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., அரசின், 5 ஆண்டுகால சாதனைகளை கூறி, தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அதேபோல், பி.எஸ்.
திம்மசந்திரம், வானமங்கலம், கே.என்.,தொட்டி, எலுவப்பள்ளி, பேரிகை, காரண்டப்பள்ளி, மாருதி நகர், சூளகுண்டா உட்பட மொத்தம், 32 க்கும் மேற்பட்ட கிராமங்களில், வேட்பாளர் சத்யா நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், எம்.பி., கோபிநாத், தேர்தல் பொறுப்பாளர் பார் இளங்கோவன் ஆகியோர், உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
வேட்பாளர் சத்யா பேசுகையில்,'' தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்பட உள்ளது. அதை வைத்து, பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொள்ள முடியும். தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகை வழங்க விடாமல் தடுத்து விடுவார்கள் என்பதை அறிந்து, முன்கூட்டியே, குடும்ப தலைவிகள் வங்கி கணக்கில், 5,000 ரூபாயை முதல்வர் வரவு வைத்தார்.
தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். அதேபோல், முதியோர் உதவித்தொ கையும் உயர்த்தப்படும் மக்கள் தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement