மழைநீர் கால்வாய்களை 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்ய உத்தரவு
பெலகாவி: ''ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லைக்கு உட்பட்ட மழைநீர் கால்வாய்களில், துார் வாரும் முன்னரும், அதன் பின்னரும் ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தி, அறிக்கை அளிக்க வேண்டும்,'' என, நகர மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோடை மழை தீவிரமடைவதால், ஜி.பி.ஏ., மத்திய அலுவலகத்தில் துஷார் கிரிநாத், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசியதாவது:
மழைநீர் தடையின்றி பாய்ந்து செல்ல முடியாமல், எங்கெங்கு இடையூறுகள் உள்ளன என்பதை, ட்ரோன் மூலம் ஆய்வு செய்து, அடையாளம் காண வேண்டும். பணிகள் முடிந்த பின்னரும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இதனால், பழுது பணிகள் நடத்த உதவியாக இருக்கும். நகரின் முக்கியமான மழைநீர் கால்வாய்களில், மண்ணை அள்ளி சுத்தமாக்க வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள சாக்கடைகளிலும், துார் வாரி சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
சாலையில் விழும் மழை நீர், தடையின்றி பாய வேண்டும். மழைக்காலம் துவங்குவதற்கு முன், நகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுக்கு, நகராட்சி, பெஸ்காம், குடிநீர் வாரிய அதிகாரிகளை நோடல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.
மாநில, தேசிய பேரிடர் மீட்பு படைகளை, தயார் நிலையில் வைக்க வேண்டும். துணைப்பிரிவு அளவில் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க வேண்டும். மழைக்காலத்துக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
மாநகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு நிலையங்களுடன் ஒருங்கிணைந்து வாட்ஸாப் குரூப் அமைக்க வேண்டும். குடிநீர் வாரியம், மெட்ரோ, ரயில்வே உட்பட அனைத்து துறைகளின் பணிகள் நடக்கும் இடத்தில், தண்ணீர் பாய்வதில் ஏற்படும் தடைகளை சரி செய்யுங்கள்.
பெங்களூரில் மழையினால் தரையில் சாயும் மரங்கள், மரக்கிளைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்படும் மரம், மரக்கிளைகளை சேகரித்து வைக்க இட வசதி செய்து ஊழியர்களை நியமிக்க வேண்டும். பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை
-
துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு