ரூ.9 கோடி தங்க நகைகள் பறிமுதல்

திருவள்ளூர்: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் மாவட்டம் லட்சுமாபுரம் அருகில், தேர்தல் பறக்கும் படையினர், சோதனை சாவடி அமைத்து, வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற 'டாடா சுமோ' காரை நிறுத்தி சோதனையிட்டதில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 1 கோடி ரூபாய் மதிப்பிலான, வெள்ளி நகைகள் இருந்தன. விசாரணையில், திருப்பதியில் உள்ள நகை கடைகளுக்கு அவற்றை வினியோகிக்க எடுத்துச் செல்வதாக, காரில் இருந்தோர் கூறினர். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement