சுற்றுலா வாகனங்களுக்கு 30 சதவீதம் வருவாய் இழப்பு சட்டசபை தேர்தல் எதிரொலி
சென்னை; சட்டசபை தேர்தல் கெடுபிடியால், சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கு, 30 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுதும் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த தொழிலை நம்பி, லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்து, கெடுபிடி சோதனைகள் அதிகரித்துள்ளன. இதனால், சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் அன்பழகன், பொதுச்செயலர் சுகுமார் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் கெடுபிடியால், நகரங்களிலும், நெடுஞ் சாலைகளிலும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வது அதிகரித்து உள்ளது.
குடும்பத்தோடு சுற்றுலாவுக்கு செல்வோருக்கு, இது சிரமத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் பிரசாரமும், பொதுக் கூட்டங்களும் பரவலாக நடக்கின்றன.
இதனால், சுற்றுலா திட்டங்களை பலரும் தவிர்த்து வருகின்றனர். இதனால், எங்களுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா