பிரபல ஜவுளி கடைகளில் வருமான வரித்துறை ரெய்டு
கோவை: தமிழகத்தில் பிரபல ஜவுளிக் கடைகளில் ஒரே நேரத்தில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை, காந்திபுரத்தில் உள்ள சிவா டெக்ஸ்டைல் நிறுவனத்தில், காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால், கடை மூடப்பட்டு இருந்தது. ஊட்டி, திருப்பூர், சேலம், கோபி, கரூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இந்நிறுவனத்தின் கிளைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் வளர்மதி பஸ்ஸ்டாப் அருகே உள்ள ஆனந்தம் சில்க்ஸிலும் ரெய்டு நடந்தது. இந்நிறுவனத்தின் தஞ்சை, ராமநாதபுரம் கிளைகளிலும் சோதனை நடைபெற்றது.
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில் சிவா டெக்ஸ்டைல் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர் வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. கடந்த 2022ம் ஆண்டிலும் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா