டூவீலர்கள் மோதி மாணவர் பலி
போச்சம்பள்ளி : டூவீலர்கள் மோதிய விபத்தில், மாணவர் உயிரிழந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், காக்கங்கரை அடுத்த பரதேசிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40, இவரது மகன் சபரி, 16, பிளஸ் 2 முடித்து விட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். நேற்று தனக்கு சொந்தமான யமஹா கிரக்ஸ் பைக்கில், அதே பகுதியை சேர்ந்த தனது சக பள்ளி நண்பர் கிரி, 16, என்பவருடன், போச்சம்பள்ளி நோக்கி களர்பதி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தர்மபுரி மாவட்டம், கொல்லஹள்ளி அடுத்த, கொல்லப்பட்டியை சேர்ந்த பெயின்டர் அருண்குமார், 30, பஜாஜ் பிளாட்டினா பைக்கில் மத்துாரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சபரி உயிரிழந்தார். கிரி, அருண்குமார் ஆகியோர் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மத்துார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்