வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை

வால்பாறை: சுற்றுலாபயணியர் வந்து செல்ல வசதியாக இ-பாஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, தங்கும்விடுதி உரிமையாளர்கள் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வால்பாறை சட்ட சபை தொகுதியில் சுதாகர் (தி.மு.க.,) லட்சுமணசிங் (அ.தி.மு.க.,) ஸ்ரீதரன் (த.வெ.க.,) உமாதேவி (நா.த.க.,) மற்றும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் வேட்பாளர்களிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், வால்பாறையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணியர் எளிமையாக வந்து செல்லும் வகையில் இ-பாஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மாலை, 6:00 மணிக்கு மேல் வால்பாறைக்கு சுற்றுலாவாகனங்கள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும். நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம், தாவரவியல்பூங்கா சுற்றுலாபயணியர் நலன் கருதி சீரமைக்க வேண்டும்.

சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில், சுற்றுலாபயணியர் வசதிக்காக உடைமாற்றும் அறை நகராட்சி சார்பில் கட்ட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை, சட்ட சபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிவர்த்தி செய்து தர வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement