சித்தி புத்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
நெகமம்: நெகமம், சித்தி புத்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
நெகமம், காந்திநகரில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி யாகசாலை முகூர்த்தக்கால் அமைக்கும் பணியுடன் ஆரம்பமானது.
11ம் தேதி, மகா கணபதி ஹோமம், தீர்த்தம் எடுக்க சென்று வருதல், வாஸ்து சாந்தி ஹோமம், யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, வேதப்பாராயணம், பிரசாதம் வழங்குதல், விமான கோபுர கலசம் நிறுவுதல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று, காலையில், மங்கள இசை, அஷ்ட லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கடங்கள் புறப்பாடு போன்றவை நடந்தது.
விமான மகா கும்பாபிஷேகம், மூலாலய மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நெகமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து சுவாமிக்கு, மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.