மது போதையில் அடிதடி காயமடைந்த ஒருவர் பலி

நெகமம்: நெகமம் அருகே உள்ள ஏரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, அதே ஊரைச் சேர்ந்த மாசாணி, 57, கூலித்தொழிலாளி மற்றும் வீரன், 65, கூலித்தொழிலாளி ஆகிய இருவரும், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 9ம் தேதி ஒருவருக்கொருவர் மாற்றி அடித்து சண்டையிட்டுள்ளனர். இதில், வீரன் ரோட்டில் கிடந்த கான்கிரீட் கல்லை எடுத்து, மாசாணியின் பின்பக்க தலை பகுதியில் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதைக்க ண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த மாசாணி, நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து, நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement