திருமாவளவன், சீமான் மீது தேர்தல் விதிமீறல்
நெல்லிக்குப்பம்: வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் மீது, தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி தொகுதி, வி.சி., கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து, ஏப்., 10 இரவு, நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் நடந்த பிரசார கூட்டத்திற்கு, அக்கட்சி தலைவர் திருமாவளவன் இரவு, 10:20 மணிக்கு வந்தார்.
தேர்தல் ஆணையம் விதிப்படி, இரவு, 10:00 மணி வரை தான், பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால், திருமாவளவன் பேசாமல் கையசைத்தபடி சென்றார். ஆனால், தொண்டர்கள் 'பானை' சின்னத்துக்கு ஓட்டு கேட்டு கோஷமிட்டனர்.
உதவி தேர்தல் அலுவலர் பலராமன் புகாரில், நெல்லிக்குப்பம் போலீசார், திருமாவளவன், வேட்பாளர் அப்துல் ரஹ்மான், தொகுதி செயலர் அருள்செல்வம் உட்பட பலர் மீது வழக்கு பதிந்தனர்.
அதேபோல, மதுரை மாவட்டம், பேரையூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விதியை மீறி, நேற்றிரவு, 10:20 மணி வரை பேசினார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்