பெண்களின் பொருளாதாரம் உயரும் :பிரசாரத்தில் தளபதி முருகேசன் உறுதி
கருமத்தம்பட்டி: சூலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம், சிந்தாமணி புதூர், செல்வராஜபுரம், பாப்பம்பட்டி பிரிவு, அரசூர், பொத்தியாம்பாளையம், ஊத்துப்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன் ஓட்டு சேகரித்தார். மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டணிக் கட்சியினருடன் சென்று ஓட்டு சேகரித்த அவர், “தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஜாமின் இல்லாமல் மானியத்துடன் ரூ. 5 லட்சம் கடன் உதவி அளிக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். சொன்னதை அவர் நிறைவேற்றுவார் என்பதற்கு இதுவரை அமல்படுத்திய திட்டங்களே சாட்சி. இத்திட்டத்தால், பெண்கள் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களின் சொந்த முயற்சியில் பொருளாதாரத்தை உயர்த்தி, வீட்டையும் நாட்டையும் உயர்த்திக்கொள்வர்” எனப் பேசி பெண்களிடம் ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்துக்கு செல்லும் பகுதிகளில் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித்தரப்படும், விவசாயிகள் நிறைந்த சூலூர் பகுதியில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறி ஆதரவு திரட்டி வரும் தளபதி முருகேசன், தன்னைச் சந்திக்கும் மக்கள் அளிக்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விசைத்தறிக்கு மின்சாரம்
சூலூர் தொகுதியில் விவசாயமும் நெசவும் பிரதானமானவை என்பதால், விவசாயம் தொடர்பான கோரிக்கைகளுக்கு முக்கியத்தும் அளித்து பிரசாரம் செய்கிறார்.
விசைத்தறியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1,000 யூனிட் மின்சாரம், 2,000 யூனிட்டாக அதிகரித்துத் தரப்படும்.
சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்களின் பல்லாண்டு கால கோரிக்கையான ஜவுளிப் பூங்கா அமைத்துத் தரப்படும்.
விசைத்தறி வணிகத்தை வளப்படுத்தும் நோக்கில், ஜவுளி சந்தை அமைத்துத் தரப்படும் என வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார் தளபதி முருகேசன்.
மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!