கட்டுமான தொழிலாளர் சங்கங்கள் கூட்டமைப்பு  தி.மு.க.,வுக்கு ஆதரவு

கோவை: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சிங்காநல்லுார் எச்.எம்.எஸ்., தொழிற்சங்க அலுவலகத்தில் சங்கத்தின் மாநில செயல்தலைவர் ராஜாமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணை தலைவர் செல்வராஜ், எச்.எம்.எஸ்., மாநில துணை தலைவர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில்,'சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது. மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் தி.மு.க., கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Advertisement