விஜய் நெற்றியில் சிலுவை குறியிட்டு வாழ்த்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்வதற்காக த.வெ.க., தலைவர் விஜய், தனி விமானம் மூலம் நேற்று மதியம் 12:30 மணியளவில் துாத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்தபோது, பெங்களூருவில் இருந்து வந்த விமானத்தில் பயணித்தோரும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
விஜயை கண்டதும் பயணியர் பலர் அவருக்கு கைகொடுத்து வாழ்த்தினர். அப்போது, ஒரு முதியவரும், அவரது மனைவியும் விஜயை கண்டதும் கைகூப்பி வணங்கினர். அவர்களிடம் நலம் விசாரித்த விஜயின் கையை தம்பதி பிடித்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
முதலில் மூதாட்டியும், பின்னர் அவரது கணவரும் விஜய் நெற்றியில் சிலுவை குறியிட்டு ஆசிர்வாதம் வழங்கி வாழ்த்தினர். அவர்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தபடி விஜய் அங்கிருந்து கிளம்பினார். விமான நிலையத்தின் வெளியே இருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி அவரது பிரசார வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
நல்ல விஷயம்தான் வாழ்த்துக்கள்மேலும்
-
பஞ்சாப் தேர்தலுக்கு மத்திய அரசு தயார்: கெஜ்ரிவால் கிண்டல்
-
கிரைம் கார்னர்
-
தொகுதி மறுவரையறைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு: இன்று கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு
-
நொய்டாவில் தொடரும் போராட்டங்கள் அமைதி முயற்சியில் போலீசாருக்கு வெற்றி
-
கெஜ்ரிவாலுக்கு பிரச்னை என்றால் எந்த அமைப்பையும் கேள்வி கேட்பார் டில்லி முதல்வர் ரேகா குப்தா கோபம்
-
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க முடிவு!: 'இண்டி' கூட்டணி கட்சிகள் திட்டவட்டம்