'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் போராட்டத்தால் வெடித்த சர்ச்சை: சென்னை பல்கலை விடுதியில் பதற்றம்
சென்னை: சென்னை பல்கலை விடுதியில், ஒரு தரப்பு மாட்டிறைச்சி சமைத்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் பன்றி இறைச்சி தரும்படி கேட்பதால், இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி வருகிறது.
விடுதியில் பதற்றம் நிலவி வருவதால், சென்னை பல்கலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தரமணியில் செயல்படும் சென்னை பல்கலைக்கான விடுதியில் 400க்கும் அதிகமான மாணவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு, வாரத்தில் மூன்று நாள் அசைவ உணவு வழங்கப்படுகிறது. இதில் ஞாயிறுக்கிழமை, மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, அசைவ உணவு வழங்கும் நடைமுறை உள்ளது.
அதன்படி, கடந்த மாதம் நடந்த, விடுதி பொதுக்குழு கூட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை உணவில் மாட்டிறைச்சி வழங்க, மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். விடுதி நிர்வாகம், அதை கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையில், விடுதி மாணவர்களுக்கான பிரத்யேக 'வாட்ஸாப்' குழுவில், மாட்டிறைச்சி கேட்ட மாணவர்களுக்கு எதிராக, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஒரு தரப்பு மாணவர்கள் விடுதி வளாகத்தில் கடந்த 10ம் தேதி இரவு, போராட்டம் நடத்தினர். அப்போது, விடுதி நிர்வாகம், 'கமிட்டி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், விடுதி நிர்வாக விதிமுறைகளை மீறி, அனுமதியின்றி சிலர், விடுதி வளாகத்தில் நேற்று முன்தினம் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விடுதி மாணவர்களில் மற்றொரு தரப்பினர், 'எங்களுக்கு பன்றி இறைச்சி சமைத்து தர வேண்டும்' என்றனர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே, மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
விடுதி மாணவர்கள் சிலர் கூறியதாவது:
விடுதியில் ஞாயிறுக்கிழமை வழங்கும் உணவில், 'எக்ஸ்டிரா' முறையில் ஏதேனும் ஒரு அசைவ உணவு வழங்கப்படும். இது மாணவர்கள் விருப்பம் தான். எனவே, சிலர் மாட்டிறைச்சி வழங்க கூறுகின்றனர். ஆனால், பலருக்கும் அது பிடிக்கவில்லை.
இந்நிலையில், மற்றொரு தரப்பினர் பன்றி இறைச்சி கேட்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. சூழ்நிலை மேலும் மோசமடையாமல் தடுக்க, நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
எந்த இந்துக்கள்? 90% தமிழ்நாட்டு கேரளா ஹிந்துக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள். இவர்கள் இந்துக்கள் இல்லையென்று சொல்லிவிடுங்களேன். 10% ஹிந்துக்கள் மட்டும்தான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள். யாரெல்லாம் இந்துக்கள்?
இவங்கெல்லாம் படிக்க கல்லூரி போறாங்களா அல்லது ரவுடி தனம் பண்ண போறாங்களா? ஏற்கனவே தமிழ் நாட்டில் கல்வி தரம் மிகவும் தாழ்ந்திருக்கு. இந்தமாதிரி பண்ணினா என்னத்த படிச்சு உருப்படறது. இவனுகளுக்கெல்லாம் TC கொடுத்து அனுப்பிடுங்க பேசாம. படிச்சு என்னத்த பண்ண போறாங்க.
மாட்டிறைச்சியை போடுவதற்கு 400 மாணவர்கள் இருக்கும் விடுதியில் 300+ மேற்பட்ட மாணவர்களின் விருப்பம். அதன் அடிப்படையில் 300+ மாணவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்ற முன்னெடுப்பையேத் தான் விடுதியில் வைத்தோம். ஆனால், இதனை இந்துத்துவா மாணவர்கள் ஆறு பேர் மட்டும் நீங்கள் சாப்பிட்ட தட்டில் நான் சாப்பிட வேண்டுமா? நீ தொட்ட கரண்டியில் நாங்களும் உணவை தொடவேண்டுமா என்ற தீண்டாமையை முன்வைக்கின்றனர். நாங்கள் மாட்டிறைச்சி அவர்களும் சாப்பிட வேண்டும் என்ற பேச்சை முன்வைக்கல எக்ஸ்ராவில் யாருக்கு வேணுமோ அவர்களுக்கு தனியாக ஒரு அறையைக்கூட வைத்துவிடுங்கள் மாணவர்கள் யார் விரும்புகிறார்களோ அதை அவர்கள் சாப்பிடுவார்கள் என்றுதான் முன்வைத்தோம் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு தீண்டாமையை முன்னெடுக்கும் விடுதி நிர்வாகத்திற்கும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். அப்படி பேசிய மாணவனை இதுவரையிலும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகமும் விடுதி நிர்வாகமும் எத்தகைய எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இதற்கு விடுதி நிர்வாகமும் சென்னை பல்கலைக்கழகமும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? அந்த ஆறு மாணவர்களுக்கு மட்டும்தான் நிர்வாகம் பக்கபலமாக இருக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது கேவலமல்ல, அது சாதிக்கிடையாது சாப்பாடு.
.மாட்டிறைச்சி சாப்பிடுவது எங்களுக்கு பழக்கம் இல்லை இந்துக்களுக்கும் எதிராக மாட்டிறைச்சிசி சாப்பிடணும் என்று தூண்டி விட்டால் உன்னை மாதிரி கருங்காலிகள் ஏன் துணைக்கு போறீங்க?
உன்னை மாதிரி கருங்காலிகள் எமைதியாக இருந்தாலே, சில சமூக விரோதிகள் அடங்கி விடுவார்கள். கூசாமல் பொய் சொல்லிட்டு திரியாதீங்க
டேய் லூ சு அதர்க்கு பேர் தீண்டாமை இல்லை சுகாதாரம் அதுசரி பன்றி இறைச்சியும் சமைத்து பரிமாற வேண்டியதுதானே அதுக்கு ஏன் பிரச்சினை வரும் ?400 மாணவர்களில் 300 பேர் விரும்புகின்றனரா கதையெல்லாம் விடக்கூடாது
மாணவர் ஹாஸ்டல்களில் சைவம் மட்டுமே கொடுக்க அரசாணை போடவேண்டும். அசைவம் வேண்டும் என்றால் வெளியே சென்று திங்கட்டும்.
ஏன் இந்த அநியாயம்? அவர்கள் சாப்பிடாவிட்டாலும் விற்கலாமே? அவர்கள் சாப்பிடுவதை ஏன் மற்றவர்கள்மீது திணிக்கிறார்கள்?
ஏன் இந்தெ குழப்பம் தேவை இல்லாமல் வாழ்க்கையை இருதரப்பும் கெடுத்து கொள்ள வேணாம். ஆடும் கோழியும் இரு தரப்பும் சாப்பிட்டால் போதும் அப்படி கட்டுபாடு இல்லாமல் இருக்கும் யாராக இருந்தாலு விடுதியை விட்டு வெளியேற்றுங்கள்
எப்படியோ இருவரும் அங்கே படிக்க போகவில்லை. கூட பாட்டிலும், கஞ்சா பொட்டலமும் கேட்பது தான் பாக்கி.
மாட்டிறைச்சி இந்துக்களின் உணர்வுக்கு எதிரானது. இது விடுதிகளில் தவிர்க்கப்பட வேண்டும்.
தாங்கள் எந்த குழுமத்தை சேர்ந்தவர்கள் மாடு பன்றி என்று இந்த மாணவர்கள் தங்களை தாங்களே வெட்ட வெளிச்சமாக காண்பித்துக்கொள்வது போல இருக்கின்றது இந்த மாணவர்களின் செயல்பாடுகள்
. சோறே இல்லாம படிச்சவந்தவந்தான் இன்னைக்கு நல்ல நிலையில் இருக்கான்மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு