மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் காஞ்சி வேட்பாளர் நித்யா சுகுமார்
காஞ்சிபுரம்: ''தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்,'' என, நித்யா சுகுமார் பேசினார்.
தேர்தல் அறிக்கையை விளக்கி, கூட்டணி கட்சியினருடன், நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் நித்யா சுகுமார், தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கொளுத்தும் வெயிலிலும் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் நித்யா சுகுமாருக்கு, தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட விப்பேடு, நரப்பாக்கம், மேல்கதிர்பூர், திருப்பருத்திகுன்றம், புத்தேரி, ஆரியபெரும்பாக்கம், முட்டவாக்கம், ஒழுக்கோல்பட்டு, கூரம், திம்மசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நித்யா சுகுமசார் பிரசாரம் செய்தார்.
இதில், ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
பிரசாரத்தின் போது, நித்யா சுகுமார் பேசியதாவது:
மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இல்லத்தரசிகள் வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்க 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தின் மூலம் 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு