ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு ஏப்.14 ல் இயங்காது

புதுச்சேரி: அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில், 'மத்திய அரசு விடுமுறை தினமான நாளை (14ம் தேதி) அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எனினும் அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement