2011ல் கொடுத்த வாக்குறுதிகளை 2016க்குள் செய்து கொடுத்துள்ளேன் அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் பெருமை
வேளச்சேரி: ''நான் 2011ல் தேர்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை, எம்.எல்.ஏ.,வாகி, 2016ம் ஆண்டுக்குள் செய்து கொடுத்துள்ளேன்'' என, வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் கூறினார்.
வேளச்சேரி அ.தி.மு.க., வேட்பாளர் அசோக், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர் பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவரிடம், திருவான்மியூர் கடற்கரை சாலை சீரமைப்பு, குப்பம் பகுதிக்கு பட்டா, சுகாதாரமான கழிப்பறை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை, அப்பகுதி மக்கள் முன்வைத்தனர்.
அதன்பின் அசோக் கூறியதாவது:
நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, பெசன்ட் நகர், திருவான்மியூரில் தொடங்கிய பல திட்டங்களை வைத்து தான், மக்கள் அனுபவித்து வருகின்றனர். மக்களின் இப்போதைய கோரிக்கைகளை பார்க்கும்போது, அதன்பின் இருமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என தெரிகிறது.
திருவான்மியூர் மக்களின் தேவையை நன்கு அறிந்துவிட்டேன். நான் வெற்றி பெற்றதும், வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவையை செய்து தருவேன். நான் 2011ல் கொடுத்த வாக்குறுதிகளை, 2016க்குள் செய்து கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது, பகுதி செயலர்கள் கண்ணன், கணேசன், வட்ட செயலர்கள் கண்ணன், நந்தகுமார், ரவி, அனந்தபத்மநாபன், பா.ஜ.,வின் சாய்ராம் லட்சுமி, குமரன், கணேஷ், பா.ம.க.,வின் ஜனார்த்தனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு