மாதா மாதம் குறைதீர் கூட்டம் நடத்தி குறைகளை தீர்ப்பேன்:  அ.தி.மு.க., வேட்பாளர் கீர்த்திகா  பிரசாரம்

திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதி மக்களோடு மக்களாக தங்கி மாதா மாதம் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தி குறைகளை தீர்ப்பேன் என்று அ.தி.மு.க.,வேட்பாளர் கீர்த்திகா பேசினார். திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் கீர்த்திகா கிராமம், கிராமமாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.


கூட்டத்தில் கீர்த்திகா பேசியதாவது:

நான் தற்போது பரமக்குடியில் தங்கியுள்ளேன். நான் வெற்றி பெற்றவுடன் திருவாடானையில் வீடு எடுத்து தங்குவேன். உங்களில் ஒருத்தியாக இருந்து உங்கள் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண்பேன். தொகுதி மக்கள் அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடனும், வைராக்கியத்துடனும் நான் உங்கள் முன்வந்துள்ளேன்.

இப்பகுதி மக்கள் தரமான சாலைகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதியை தான் பிரதான கோரிக்கையாக வைக்கின்றனர். இப்பகுதி விவசாயப் பகுதி என்பதால் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

நான் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தி மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தொகுதி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று பேசினார். ஒன்றிய செயலாளர்கள் ரெத்தினமூர்த்தி, ரவிச்சந்திரன்,ஆசைராமநாதன், ஆண்டவர் கலந்து கொண்டனர்.

--

Advertisement