த.வெ.க., வேட்பாளர் கமலி அன்னுாரில் பிரச்சாரம் துவக்கம்

அன்னுார்: அவிநாசி தொகுதி த.வெ.க., வேட்பாளர் கமலி, அன்னூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அன்னுார் ஒன்றியத்தில் நேற்றுமுன்தினம், முதன்முறையாக பிரச்சாரத்தை துவக்கினார். அன்னுாரில், ஓதிமலை சாலையில் உள்ள பாத விநாயகர் கோவில் முன் விநாயகரை வழிபாடு செய்து துவக்கினார். ஓதிமலை சாலை, பிரதான சாலை, கோவை சாலை வழியாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்சி தேர்தல் அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்றனர்.

பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, த.வெ.க.,வுக்கு வாக்களியுங்கள் என்று கூறியபடி ஓட்டு சேகரித்தார்.

வாக்காளர்களிடம் வேட்பாளர் பேசுகையில், ''தி.மு.க., --- அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளன. தலைவர் விஜய் மட்டுமே ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளார். அவிநாசி தொகுதியில் த.வெ.க., வெற்றி பெறுவது உறுதி,'' என்றார்.

ஏராளமான இளைஞர்கள் ஒரே மாதிரி உடை அணிந்து, கட்சிக்கொடி ஏந்தியபடி விஜயை வாழ்த்தியும் கட்சியை வாழ்த்தியும் கோஷம் எழுப்பியபடி பிரச்சாரத்தில் சென்றனர். பிரச்சாரத்தில் பெரும்பாலும் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகமாக இருந்தனர்.

Advertisement