தி.மு.க.-தே.ஜ. கூட்டணியினர் சந்திப்பு :'கும்பிடு' போட்ட தி.மு.க. வேட்பாளர்
கோவை:பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று காலை கோவை தெற்கு தொகுதியை அடுத்து, வடக்கு தொகுதிக்குட்பட்ட கண்ணப்பன் நகரில் பிரசாரம் செய்தார்.
காலை 9:30 மணி முதலே அ.தி.மு.க., பா.ஜ. உள்ளிட்ட தே.ஜ. கூட்டணி தொண்டர்கள் 'ஜமாப்' இசைத்தும், குத்தாட்டம் போட்டும் அண்ணாமலைக்காக காத்திருந்தனர்.
நான்கு ரோடு சந்திக்கும் இடம் என்பதால் வாகனங்கள் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருந்தன. ரோட்டின் வடக்கே தே.ஜ., கூட்டணி தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது, தெற்கே இருந்து தி.மு.க., வேட்பாளர் செந்தமிழ் செல்வன் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து தொண்டர்கள் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டு கேட்டு வந்தனர்.
அப்போது தே.ஜ., கூட்டணி கட்சியினரை பார்த்த செந்தமிழ் செல்வன், கையை காண்பித்தும், வணங்கியும் ஓட்டு சேகரித்தார். பின்தொடர்ந்து வந்த தொண்டர்கள் உதய சூரியன் சின்னத்தையும், பலுான்களையும் துாக்கி காண்பித்து ஆட்டம் போட்டபடி சென்றனர்.
தே.ஜ., கூட்டணியினரும் தாமரை, இரட்டை இலை சின்னங்களை துாக்கி காண்பித்து உற்சாகமாக ஓட்டு கேட்டனர். அண்ணாமலையும் இருந்திருந்தால் இன்னும் உற்சாகமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும் என்கின்றனர் தே.ஜ. கூட்டணியினர்.
மேலும்
-
குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்