தேர்தலுக்கு பின் ஸ்டாலின் கட்சி, கனிமொழி கட்சி என திமுக பிரியும்; அண்ணாமலை
கோவை: தமிழகத்தில் இனி ஜென்மத்துக்கும் திமுக ஆட்சிக்கு வராது. தோற்றால், கனிமொழி தனி கட்சி; ஸ்டாலின் ஒரு கட்சி என திமுக பிரியும் என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை வடக்கு தொகுதியில் பிரசாரம் செய்த அவர் அளித்த பேட்டி:
திமுகவினர் ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தேன். உதாரணமாக, அமைச்சர் காந்தியின் வேட்டி, சேலை ஊழல்; அவரின் 160 கோடி ரூபாய் ஊழல் குறித்து ஆதாரத்துடன் அளித்துள்ளேன்.
பாஜ அலுவலகம் வந்து, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறட்டும். புழல் சிறையில் அவர்களுக்கு தனி 'பிளாக்' கட்டி நடவடிக்கை எடுக்கப்படும்.
விஜயின், 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளத்தில் 'லீக்' ஆனதை, வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் முருகனை தொடர்புபடுத்தி பேசுவது வன்மத்தனத்தின் உச்சகட்டம். எந்த விஷக்கிருமிகள் அதை செய்திருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இனி, திமுக ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது. திமுக தோற்றால், கனிமொழி தனி கட்சி; ஸ்டாலின் ஒரு கட்சி என பிரியும். யாரிடம் திமுக செல்லும் என்று யாருக்குமே தெரியாது.
செந்தில் பாலாஜியும் வாய்ப்பை பார்ப்பார். கனிமொழியிடம் சேர்வதா அல்லது ஸ்டாலினிடம் செல்வதா என்று யோசிப்பார்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
எலி ஜோஷ்யம்.
அப்போ சபரீசன்
மு க அழகிரி மட்டும் ஒதுங்கியிருப்பாரா ????
உதயநிதியும் ஒரு கட்சி துவங்குவார். பிறகு வொவொரு மூத்த தலைவர்களின் பிள்ளைகளும் வொவொரு கட்சி துவங்குவார்கள். ஒரே காட்சிதான் தமிழகத்தில்.
தமிழக தேர்தலுக்கு பிறகு
அண்ணாமலை சொல்வது சரிதான் . இப்ப தனித்தனி அணியாக உள்ளது தேர்தலுக்குப் பின் தனித்தனிக் கட்சியாக மாற நிறையவே வாய்ப்புள்ளது.
ஜெ. இறந்த உடனேயே தமிழக மாநிலம் மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தால், சென்னை தனி யூனியன் பிரதேசம் ஆகியியுந்தால் இத்தனை நேரம் தெற்கில் திராவிடத்தின் சுவடு இன்றி ஐசியூ வில் இழுத்து கொண்டு இருந்திருக்கும்.இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருக்கும்..காலம் தங்கத் தட்டில் வைத்து கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்டது பாஜக & தேசிய கட்சிகள்.. இன்று கூட அதற்கான வாய்ப்பு/ வாயில் திறந்தே இருக்கிறது... ஆனால் பாஜக பயன்படுத்துமா என்பதுதான் கேள்விக்குறி?...தேச நலனுக்காக இந்த மாநில பிரிவினை நடவடிக்கையை பாஜக எடுத்தே தீரவேண்டும் என்பதுதான் தேசபக்தர்களின் நிலைப்பாடு....
நல்ல கற்பனை அண்ணாமலை அப்படியே கதை, திரைக்கதை, வசனம், எழுதி வேறு தொழிலுக்கு போகலாம். அடுத்து, அந்த D.M.K Files என்று கதை விட்டீர்களே என்ன ஆச்சு ? உங்கள் கட்சி யஸ்வந்த் ஷர்மா என்று ஒரு நீதிபதி, அதுதான் கட்டு காட்டாக பணம் பூஜை ரூமில் எரிய விட்டாரே, அவர் மீது எந்த நடவடிக்கையும் ஒருவருடமாக எடுக்கலையாமே நல்ல கட்சி ரொம்ப நல்ல பிரதமர் உச்ச நீதிமன்றம் சொல்லியும் செய்யாலாய் என்றால் சும்மாவா ?
மைக் கையில கெடைச்சா என்ன வேண்டாலும் உளறனாமா?
ஜோதிடத்தில் அண்ணாமலை நிபுணர் போல் தெரிகிறது!மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்