மாநகரில் நிகழ்ச்சிகள்

ஆன்மீகம் சிறப்பு பூஜை • பீளமேட்டில் உள்ள ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரகாமாய் கோயிலில் மாலை 6:45 மணியளவில் சிறப்பு பூஜை நடக்கிறது.

• இடையர்பாளையம், வெள்ளலூரில் உள்ள கொண்டத்து மாகாளியம்மன் கோயிலில் காலை 7:30 மணி மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

• தனலட்சுமிபுரம், செட்டியார் லைனில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயிலில் காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

• ஓண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரத்தில், காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீட திருக்கோயிலில் காலை 6:00 மணி முதல் விசேஷ பூஜை நடக்கிறது.கவி மன்றம்

கே.ஜி. திரையரங்கு எதிரில் உள்ள கோவை உற்பத்தித்திறன் குழு அரங்கில், “பாவேந்தரின் மானுட அறம்” எனும் தலைப்பில் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கவிதை நிகழ்ச்சி காலை 10 மணி முதல் நடக்கிறது.இசை

கோவைபுதூர், கிளப் ரோடில் உள்ள ஸ்ரீ சங்கர கிருபா அரங்கில் “மகோத்சவம்” எனும் சங்கீத சமர்ப்பணம் மாலை 5:30 மணியளவில் துவங்குகிறது.விளையாட்டு

டி.கே.எஸ் மைதானத்தில் கம்யூனிட்டி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. 5 அணிகள் பங்கேற்கும் பத்து ஓவர் போட்டி காலை 7 மணி முதல் துவங்குகிறது.

Advertisement