வீதியில் வலம் வருகிறார் வில்லன் நடிகர்
கோவை: காந்திபுரம் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவரை பார்த்தபோது, இந்த முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று தோன்றியது. கேட்டால் கோபித்துக் கொள்வாரோ எனறு தயங்கியபடி விசாரித்த போது, கொட்டி விட்டார் உள்ளத்தின் குமுறலை.
விஜய் ஈஸ்வரன் அவர் பெயர். விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகானுடன் காரை படிந்த பற்களுடன் கொடூர வில்லனாக நடித்தவர். வெள்ளாணைப்பட்டி அவர் பூர்வீகம். மேட்டுப்பாளையத்தில் 'அம்மன் கோவில் கிழக்கே' படப்பிடிப்பு நடந்தபோது, சிலம்பம் சுற்ற ஆட்கள் வேண்டும் என்று தேடினர். எம்.ஜி.ஆர். போல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கி வைத்திருந்த ஈஸ்வரன் முதல் ஆளாக சென்றார். விஜயகாந்திடம் அறிமுகமானார். பின்னர், உழவன் மகன் படத்தில் ரேக்ளா பந்தயத்தில் துவங்கி, கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் சாத்தையாவாகவும், சின்னக்கவுண்டரில் வண்டிக்காரனாகவும் தொடர்ந்து சினிமா பயணத்தில் அவருடன் 56 படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர், 'ஈஸ்வரா நீ அருகில் இருந்து என் நண்பனை எப்போதும் பார்த்துக் கொள்' என்று கூறியதால், விஜயகாந்துக்கு காவலராக மாறினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த நட்பால் விஜயகாந்த் தே.மு.தி.க. துவங்கிய போது மதுரை மாநாட்டில், 'ஈஸ்வரா உன் நன்றி உணர்விற்கு இந்த மாநாட்டில் நீ நன்றியுரை வாசிக்க வேண்டும்,' என கேட்டுக் கொண்டதை நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.
விஜயகாந்த் இறந்தபின் கோவைக்கே வந்து விட்டார். இரண்டு ஆண்டுக்கு எஸ்.பி.வேலுமணியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்த இவர் 74 வயதில் ஒரு அதிமுக தொண்டனாக கோவை வீதிகளில் பிரசாரம் செய்கிறார். தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற பிரமாண்ட நாயகர்களை மறந்த மக்கள், விஜய் ஈஸ்வரன் என்ற சிறிய நடிகனை எப்படி நினைவில் வைத்திருக்க முடியும் என்று ஏக்கத்துடன் புன்னகைக்கிறார்.
மேலும்
-
குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்