பலகாரம் சுட்டு ஓட்டு சேகரித்த பா.ஜ., வேட்பாளர் தங்கராஜ்

திருப்பூர்: திருப்பூர் சாமுண்டிபுரத்தில் டீக்கடையில் பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் பலகாரம் சுட்டு ஓட்டு சேகரித்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் கூட்டணி கட்சியினருடன் பலத்த மக்கள் வரவேற்புடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நேற்று, திருப்பூர் கொங்கணகிரி முருகன் கோவிலில் தரிசனத்தை முடித்து பிரசாரத்தை துவக்கினார்.

சாரதா நகர், மகா சக்தி நகர், நேரு நகர், எம்.ஜி.ஆர். நகர், ஏ.வி.எம். நகர், மாரியம்மன் கோவில், சாமுண்டிபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரித்தார்.

சாமுண்டிபுரத்தில் உள்ள டீக்கடையில் ஓட்டு சேகரித்த வேட்பாளர், கடையில் பலகாரம் சுட்டு, மக்களை கவர்ந்தார். மக்கள் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மூத்தோர்களிடம் காலில் விழுந்து வேட்பாளர் வாழ்த்து பெற்றார். அங்கிருந்து கிளம்பிய வேட்பாளர் முருகப்பாளையம், ராஜம்மாள் லே அவுட், தாரக்காடு, ரேஷன் கடை, பாரதிதாசன் காலனி, வளையங்காடு, ராஜீவ் நகர், பாலமுருகன் நகர், மரக்கடை பஸ் ஸ்டாப், விவேகானந்த நகர், மாஸ்கோ நகர் ரவுண்டனா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் தீவிர ஓட்டு சேகரித்தார்.

மக்கள் மத்தியில் வேட்பாளர் தங்கராஜ் பேசியதாவது:

திருப்பூரின் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு அதிகம் உள்ளது. வெற்றி பெற்று வந்த பின், நகரின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவோம். நகரில் நிழவும் குப்பை பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும். கடந்த, ஐந்து ஆண்டாக, தி.மு.க. அரசு வஞ்சித்துள்ளது. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

--

திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ், சாமுண்டிபுரத்தில் உள்ள டீக்கடையில், பலகாரம் சுட்டு ஓட்டு சேகரித்தார்.

@block_B@ வீடுகள் முன் தாமரை கோலம் திருப்பூர் தெற்கு பா.ஜ. வேட்பாளர் தங்ராஜூக்கு ஓட்டு சேகரிக்கும் வகையில், ஹிந்து அன்னையர் முன்னணியினர் திருப்பூர் கரட்டாங்காடு, 3 வது வீதியில் தங்களது வீடுகள் முன் தாமரை கோலமிட்டு, மக்களிடம் ஓட்டு சேகரித்தனர்.block_B

Advertisement