மது விற்ற பெண்கள் கைது

திருக்கழுக்குன்றம்: மது விற்ற பெண்களை, போலீசார் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றம் அடுத்த, பாண்டூர் பகுதிகளில், கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்கப்படுவதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று அதிகாலை, அப்பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

பாண்டூரில், சேகர் மனைவி சின்னபொண்ணு, 54, என்பவர், 30, கிளாப்பாக்கத்தில், முருகன் மனைவி அமிர்தம், 46, என்பவர் 16, என, 46 குவார்ட்டர் பாட்டில்களை, விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.

அவர்களை, போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement