கார் மீது லாரி மோதி ஒருவர் பலி

கூவத்துார்:கூவத்துார் அடுத்த முகையூரில் கார் மீது லாரி மோதி ஒருவர் பலியானார். சென்னையை சேர்ந்தவர் ராஜூ, 45. இவர் சென்னையில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார்.

புதுச்சேரியில் போதைக்கு அடிமையான ஒருவரை சென்னைக்கு அழைத்து வருவதற்காக ராஜூ தன் நண்பர்கள் நால்வருடன், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு காரில் கூவத்துாரையடுத்த முகையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் ராஜூ சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த நண்பர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூவத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement