சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 'குண்டாஸ்'

செங்கல்பட்டு:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மார்ச் 9ம் தேதி 14 வயது சிறுமியை, இருவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து, மேல்மருவத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த தாமோதிர பெருமாள், 25 உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் தாமோதிர பெருமாளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., அய்மன் ஜமால் பரிந்துரை செய்தார். இதையேற்று, அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் மாலதி ெஹலன் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement