ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பழைய பஸ்ஸ்டாண்டில் ராட்சத பலுான் பறக்கவிடப்பட்டது.

பஸ் முகப்பு கண்ணாடிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement