தேவர் சமூக அறக்கட்டளை நிர்வாகிகளுடன் சந்திப்பு

திருப்பூர்: அவிநாசி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.வேட்பாளர் முருகன், தேவர் சமூக அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.

வெள்ளியம்பாளையத்தில் நடந்த இந்த சந்திப்பு கூட்டத்துக்கு, தேவர் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அப்போது, பா.ஜ. வேட்பாளர் முருகன், தனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டு கொண்டார். வெற்றி பெற்றால், செம்பியநல்லுார் ஊராட்சியிலுள்ள பிரச்னைகள், தேவர் திருமண மண்டப இட பிரச்னை ஆகியவற்றுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

முன்னதாக, முருகன், தேவர் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்தார். தேவர் திருமண மண்டப அறக்கட்டளை நிர்வாகிகள் பழனிசாமி, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

---

அவிநாசி பா.ஜ. வேட்பாளர் முருகன், தேவர் சமூக அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்தார்.

Advertisement