வேருடன் சாய்ந்த மரத்துக்கு அடியில் சிக்கியவர் மீட்பு

புதுடில்லி: உத்தம் நகரில், வேரோடு சாய்ந்த மரத்துக்கு அடியில் சிக்கிய வாலிபர் மீட்கப்பட்டார்.

மேற்கு டில்லி உத்தரம் நகர் குருத்வாரா, ஏ பிளாக் சுடுகாடு அருகே நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு பலத்த காற்றால் ஒரு மரம் வேருடன் பெயர்ந்து விழுந்தது. அந்த மரத்துக்கு அடியில் நின்றிருந்த கல்லு,26, என்பவர் மரத்துக்கு அடியில் சிக்கினார். தகவல் அறிந்து, இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி, வாலிபரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement