ஓடையில் துார்வாரப்பட்ட கழிவுகள் ரோட்டிலேயே கொட்டுவதால் அவதி: சிவகாசி காமராஜர் பூங்கா முன்புறத்தில்
சிவகாசி:சிவகாசி காமராஜர் பூங்கா முன்புறம் உள்ள ஓடையில் எடுக்கப்பட்ட கழிவுகளை ரோட்டிலேயே போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டியில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சிவகாசி முருகன் கோயிலில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் காமராஜர் பூங்கா உள்ளது. பூங்காவிற்கு தினமும் ஓய்வு எடுப்பதற்காக பலரும் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் அதிகமானோர் விளையாடுகின்றனர். பூங்காவை கடந்து தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் பூங்கா நுழைவாயில் முன்புறம் உள்ள ஓடை துார்வாரப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்பட்டது. இந்த கழிவுகள் அனைத்தும் ரோட்டிலேயே கொட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுகள் ரோட்டை ஆக்கிரமித்து எந்த வாகனமும் சென்றுவர முடியவில்லை. பூங்காவிற்கு வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தவிர அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
பெண்ணை வெட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம் * மூவரிடம் போலீஸ் விசாரணை
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்