ரோட்டில் மீன் கடைகளால் இடைஞ்சல், குடியிருப்பு இடையே குப்பை:காமராஜர் நகரின் அவலம்
ராஜபாளையம்:வாறுகால்களில் அடைப்பு, மெயின் ரோடு கடைகள் ஆக்கிரமிப்பு, மேடு பள்ளமான ரோடால் பாதிப்பு என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
ராஜபாளையம் டி.பி மில்ஸ் ரோடு தென்காசி ரோடு இடையில் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் காமராஜர் நகர் அமைந்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து நகராட்சியில் அதிக வரி செலுத்தும் ஏ பிரிவில் உள்ளது. இருப்பினும் போதுமான அடிப்படை வசதி இல்லை.
டி.பி மில்ஸ் ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கான சீனியப்ப நாடார் மெயின் தெருவில் உள் நுழையும் பஸ்கள் இரண்டு பக்கமும் தள்ளுவண்டி கடைகள், ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த ஹாஸ்பிடல் ரோட்டிலும் அனுமதி இன்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இங்கு குடியிருப்பு நடுவே குப்பைகளை குவிப்பதுடன் முறையாக குப்பைகள் அகற்றும் பணி நடைபெறுவதில்லை. பொது போக்குவரத்து அதிகம் உள்ளதாலும் வணிக நிறுவனங்கள் சுற்றி உள்ளதாலும் குடியிருப்பு பகுதி பாதிக்கிறது. குப்பை சாக்கடையில் அடைத்து சுகாதாரக் கேடு ஏற்படுத்தி வருகிறது.
சாலையோர தள்ளுவண்டி கடைகளை ஆங்காங்கே நிறுத்தி ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
பல பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளின் போது சேதமான குழாய்களை சரி செய்யாமல் குடிநீர் தொட்டி முடங்கி உள்ளது.
பல இடங்களில் மெயின் ரோடுகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் சீரமைக்காததால் போக்குவரத்து பாதிக்கிறது.
நாய்கள் தொல்லை:
வணிக நிறுவனங்கள் தள்ளுவண்டி இறைச்சி கடைகள் அதிகம் உள்ளதால் இவற்றைத் தேடி வரும் நாய்கள் அதிகம். பராமரிப்பற்ற தெருநாய்கள் அதிகரிப்பால் பகல் நேரங்களிலும் பாதுகாப்பற்ற சூழல், இரவில் கூட்டமாக விரட்டுவதால் சிக்கல், வேகமாக செல்லும் வாகனங்கள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. கட்டுப்படுத்த வேண்டும்.
பெரியசாமி,குடியிருப்பாளர்.
நமக்கு நாமே என பூங்கா:
காமராஜர் நகரில் தனியார் லாட்ஜ், மருத்துவமனை, குடியிருப்புகள் இடையே குப்பை பிரிப்பவர்கள் சேகரிக்கும் பொருட்களை குவிப்பதால் நாளடைவில் சுகாதாரக் மாறியது. இதை குப்பை கொட்டும் பாய்ண்டாக மாற்றுவதை தடுக்க நமக்கு நாமே திட்டம் போல சாலையோர பூங்காவாக மாற்றி
சமாளிக்கிறோம்.
ராஜரத்தினம், தொழில் முனைவோர்.
சாக்கடைகளில் தேக்கம்:
நகராட்சியிலேயே அதிக வரி செலுத்தும் குடியிருப்பு பகுதியாக இருந்தும் சாக்கடைகள் முறையாக சுத்தம் செய்வதில்லை. இவற்றில் கழிவுகள் அடைத்து கொசு தொல்லை, துர்நாற்றம் போன்ற சுகாதாரக் கேடுகளுடன் வசிக்க வேண்டி உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியிலாவது மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும்.
சடையம்மாள், குடியிருப்பாளர்.
மீன் கடைகளால் பாதிப்பு: பழைய பஸ் ஸ்டாண்ட் நுழையும் மெயின் ரோட்டின் இரண்டு பக்கமும் மீன் கடைகளை விரித்து வைத்துள்ளதால் போக்குவரத்து பாதிப்புடன் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டிற்குள் இவர்களுக்கு சந்தை அமைத்து கொடுத்தும் ரோட்டிலேயே வைத்துள்ளனர். தொடரும் நீண்ட கால பிரச்சனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாக்டர். சிவக்குமார்,
மேலும்
-
'வீரமரணம்' ராணுவ வீரருக்கு 33ம் ஆண்டு நினைவஞ்சலி
-
தேர்தல் ஊழியர்கள் பணி நியமனம் குளறுபடி அதிகம் என குற்றச்சாட்டு
-
துவங்கியாச்சு ஓட்டுப்பதிவு!
-
சாத்தான்குளம் வழக்கு தண்டனை; போலீசாருக்கு கடும் எச்சரிக்கை
-
2011ல் கொடுத்த வாக்குறுதிகளை 2016க்குள் செய்து கொடுத்துள்ளேன் அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் பெருமை
-
பறக்கும் படை சோதனை ரூ.10.50 லட்சம் பறிமுதல்