சிவகாசியில் சேதமடைந்த ரோடுகள் :வாகன ஓட்டிகள் அவதி
சிவகாசி:சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி ஜக்கம்மாள் கோயிலிலிருக்கு பழைய தாயில்பட்டி வழியாக சித்துராஜபுரம் விஸ்வநத்தம் ஊராட்சிகளுக்கு மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். தவிர பள்ளி, கல்லுாரி வாகனங்கள் பட்டாசு ஆலை வாகனங்கள் கனரக வாகனங்கள் என எப்பொழுதும் வந்து சென்று கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ரோடு முழுவதுமே சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதில் எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
இதேபோல் வெம்பக்கோட்டை ரோடு விலக்கிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள பள்ளிகளின் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் மாணவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட இந்த ரோடு சேதம் அடைந்துள்ள நிலையில் வாகனங்கள் விலகிச் செல்வதற்கு வழியில்லாமல் தடுமாறுகின்றன. டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதேபோல் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த முக்கிய ரோடுகள் சேதம் அடைந்துள்ளது. இங்கு அவ்வப்போது பஞ்சர் மட்டுமே பார்க்கப்படுகிறது. முழுமையாக சீரமைக்கப்படுவதில்லை. எனவே மாநகராட்சியில் சேதம் அடைந்த ரோடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முனீஸ் பாண்டி, வழக்கறிஞர், வெம்பக்கோட்டை ரோடு விலக்கிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் எந்நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் இந்த ரோட்டில் ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்த ரோட்டால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக இங்கு சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
டேனியல், சமூக ஆர்வலர், ஜக்கம்மாள் கோயிலில் இருந்து பழைய தாயில்பட்டி செல்லும் ரோடு வழியாக விஸ்வநத்தம் சித்துராஜபுரம் ஊராட்சிக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ரோடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. எனவே உடனடியாக சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.
மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!