தி.மு.க., கூட்டணியில் திருமாவளவன் நிலை பரிதாபமாக உள்ளது :அன்புமணி விமர்சனம்
திருவண்ணாமலை: ''தி.மு.க., கூட்டணியில், திருமாவளவன் நிலை பரிதாபமாக உள்ளது. கூட்டணியில், அவருக்கு மரியாதை இல்லை,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
திருவண்ணாமலையில், அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின், லோக்சபா தேர்தல் என நினைத்துக் கொண்டு இருக்கிறார். இது சட்டசபை தேர்தல்; நிகழ்காலத்திற்கு வாருங்கள். தமிழகத்தை கடந்த ஐந்தாண்டுகளாக சீரழித்து, பெண்களை மானபங்கம் செய்து, குழந்தைகளை கொடூரமாக கொன்று, ஊழல் செய்து, விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து, நெசவாளர்களை வறுமையால் பாதிக்க வைத்து உள்ளனர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்தில் கூட மது, போதை பொருட்கள் ஒழிப்பு பற்றி ஏன் பேசவில்லை, இளைஞர்கள் எப்படி நாசமாக போனாலும் பரவாயில்லை என விட்டு விட்டீர்களா. தி.மு.க., ஆட்சியில், 62,000 குழந்தைகள் குற்றங்கள், 44,000 பேருக்கு பெண்களுக்கு எதிரான கொடுமை நடந்துள்ளன. இவை, தெரிந்த 10 சதவீதம் தான், தெரியாதது 90 சதவீதம்.
தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிலை பரிதாபமாக உள்ளது. அவருடைய கட்சிக்குள்ளேயே தி.மு.க., ஆதிக்கத்தால் குழப்பம். தி.மு.க., கூட்டணியில் அவருக்கு மரியாதை இல்லை; அவருக்கு மட்டும் அல்ல, பட்டியலின மக்களுக்கு ஒரு துளி அளவு கூட மரியாதை கிடையாது.
தேர்தலுக்காகவே, விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்' படத்தை எடுத்திருக்கிறார்கள். இப்போது, தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன், எச்.டி., தரத்தில் வெளியிடுகிறார்கள் என்றால், யார் வெளியிட்டார்கள் என, கண்டுபிடிக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரித்தால், யார் வெளியிட்டார்கள் என தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
செத்த பாம்பை அடிப்பதில் வீரம் இல்லை.
மாம்பழத்தினுள் இருக்கும் கொட்டையாக அன்புமணியும் பழுத்த சதைப்பற்று அந்த பழம் அழுகுமுன் இருக்கும் சதுப்புதசை அய்யா அவர்களும் தோலாக ஜி.கே.மணியும் இப்படி மூவரும் சேர்ந்து ஒரு மாம்பழத்தை தாயாரித்து மக்களுக்கு கொடுக்குமுன்னே அதில் வண்டு வந்து துளைத்து பழத்தின் வயதான காரணத்தினால் பழத்தின் சதுப்பையும் தின்றுவிட்டதே எஞ்சியது கொட்டைதான் அன்புமணி நன்றாக இருக்கிறது இதையாவது வேறு இடத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் சேர்ந்து சில தொகுதிகளில் போட்டால் நன்றாகவே விளையும் வளரும் மரமாக வந்து மக்களுக்குப்பயன்படும்
விசிக கட்சி திமுக கூட்டணியில் சேராமல் போய் இருந்தால்....இந்நேரம் விசிக கட்சி இரண்டாக உடைந்து போய் இருக்கும்.
ஐயா தங்களது வேட்பாளர்களின் தொகுதிகளில் , தங்களை எதிர்த்து , தங்களின் அப்பா பிரச்சாரம் செய்ய போகிறார், அதை எப்படி சமாளிப்பது என்று யோசியுங்கள். மற்ற கட்சிகளின் நிலைமையை யோசித்து உங்களின் நேரத்தை விரயம் செய்வது நன்மை பயக்காது.
சொந்த கட்சியிலேயே அவரது நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கு. கட்சியில் யாருமே இல்லாத மாதிரி வெளியே உள்ள காங்கிரஸ் காரருக்கு ஏன் சீட் கொடுத்தீங்கன்னு அவரை போட்டு பின்னி பெடல் எடுக்கறாங்க.
ஒரு பிளாஸ்டிக் சேருக்காக அவர் படும் வேதனை உங்களுக்கு புரியுமா ?
அவரே நொந்து போய் இருக்காரு, நீங்க வேற கொளுத்தி போடறீங்களே பாஸு
கையில் மாம்பழத்தின் தோலையும் கொட்டையையும் மட்டுமே வைத்துக் கொண்டு அதிமுக கூட்டணியில் இவர் நிலைமையை விட ஒன்றும் மோசமில்லை!மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?