தேர்தல் விதியை மீறிய சீமான்

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் விதியை மீறி நேற்றிரவு 10:20 மணி வரை பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த சீமான் பேசியதாவது: தி.மு.க., மக்களாட்சி நடத்தவில்லை. மாணவர்களுக்கு தேர்தல் வந்ததால் தான் லேப்டாப் வழங்கியது. தேர்தல் வந்த போது தான் பொங்கல் பரிசு வழங்கியது. அதேபோல் மகளிருக்கு ரூ.5000 வழங்கியதும் இந்த தேர்தலுக்காக தான். தேர்தல் ஆட்சி தான் நடத்துகிறது என பேசினார்.

முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்றிரவு 9:30 மணி அளவில் பேரையூரில் மேடையில் ஏறி பேச துவங்கிய சீமான் நேற்றிரவு 10:20 மணி வரை பேசினார்.

Advertisement