நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வரவு வைப்பு

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் சம்பளம் வழங் காமல் இழுத்தடிக்கப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், எதிரொலியாக நேற்று ஊழியர்கள் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டது.

நகராட்சிகளில் பணியும் கமிஷனர், பொறி யாளர் தவிர்த்து மற்ற அனைவருக்கும் நகராட்சி வரி வசூலில் இருந்து தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏப். 9 வரை மற்ற ஊழியர்களுக்கு விருதுநகர் நகராட்சியில் சம்பளம் வரவு வைக்கப்படவில்லை.

ஆனால் ஏப். 6 முதல் கோவில்பட்டி, அருப்புக் கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் சம் பளம் போட்டு விட்டனர். இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராசன், கலெக்டர் சுகபுத்ரா, நகராட்சி கமிஷனர் விஜய்குமாருக்கு மனு அனுப்பியிருந்தார். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று முன் தினம் ராஜபாளையம் கமிஷனரை வரவழைத்து சம்பளம் போட வைத்தது சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரகம். இதனால் மாலையில் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் சம்பளம் வரவு வைக்கப்பட்டது.

Advertisement