பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

அமைந்தகரை: தோழியுடன் நடந்து சென்ற பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.

ராணிபேட்டையைச் சேர்ந்த 29 வயது பெண், அரும்பாக்கம் மகளிர் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

கடந்த 8ம் தேதி, அப்பகுதி உடற்பயிற்சி கூடத்திற்கு பெண் தோழியுடன், என்.எஸ்.கே., நகர் சிக்னல் அருகில் நடந்து சென்றார். அப்போது, அதே உடற்பயற்சி கூடத்திற்கு வரும் நபரும், அவரது நண்பரும், அந்த பெண்ணிடம் பேசி கொண்டிருந்தனர்.

அவர்கள் கிளம்பும்போது, நண்பர் திடீரென பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரித்து, பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரும்பாக்கத்தைச் சேர்ந்த குணசேகரன், 41, என்பவரை கைது செய்தனர்.

Advertisement