பைக் திருடிய 3 பேர் சிக்கினர்
மதுரவாயல்: நெசப்பாக்கம், அண்ணாச்சி நகரைச் சேர்ந்தவர் கவுசிக், 22. இளங்கலை படிப்பு முடித்து வேலை தேடி வருகிறார்.
கடந்த 3ம் தேதி, ஆலப்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள டீ கடையில், இவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நண்பருடன் காரில் சென்றார்.
இந்த வாகனம் திருடு போனது. மதுரவாயல் போலீசார் விசாரித்து, வாகனத்தை திருடிய காட்டுப்பாக்கம் கே.கே., நகரைச் சேர்ந்த அருண்குமார், 24, மற்றும் 15 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்தனர்.
அருண்குமார், பூந்தமல்லி காவல் நிலைய பழைய குற்றவாளி; அவர் மீது ஒன்பது குற்ற வழக்குகள் உள்ளன. இரு சிறுவர்கள், அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement