நீண்ட நேரம் நிறுத்தப்படும் ரயில்கள் வழித்தடங்களில் இயக்கினால் பயன்
உடுமலை: கோவை, மன்னார்குடி, மதுரை பகுதிகளில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை பயன்படுத்தி, மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கும், கோவையில் இருந்து போடிக்கும் ரயில்கள் இயக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டுறவு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி, தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.
கோவை ரயில் நிலையத்தில், மன்னார்குடி விரைவு ரயில் பெட்டிகள், சுமார் 9 மணி நேரமும், மன்னார்குடியில் சுமார், 12 மணி நேரமும், இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதே போல், புனலுார் - மதுரை விரைவு வண்டி பெட்டிகள், மதுரையில் சுமார், 15 மணி நேரம் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த ரயில்களின் பெட்டிகளை பயன்படுத்தி, மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கும், கோவையில் இருந்து போடிக்கும் ரயில்களை இயக்கினால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
வண்டி எண் 16616 , கோவையில் இருந்து,12:30 மணிக்கு, புறப்பட்டு, காலை, 7:40 மணிக்கு மன்னார்குடி சென்றடைகிறது, மன்னார்குடி சென்றடைந்த பிறகு, இந்த பெட்டியை பயன்படுத்தி வேளாங்கண்ணி வரை இயக்கலாம்.
அங்கிருந்து, மதுரை வரை மீண்டும் இயக்கலாம். பிறகு மதுரையிலிருந்து வழக்கம் போல் இதே ரயில் பெட்டிகளைக்கொண்டு, வண்டி எண் 16729 புனலுாருக்கு இயக்கலாம்.
மறு மார்க்கத்திலிருந்து 16730 என் கொண்ட வண்டி புனலுாரில் இருந்து மதுரை வரையும் , மதுரை சென்றடைந்த பின், அதே பெட்டிகளை கொண்டு, மதுரையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், பிறகு வேளாங்கண்ணியில் இருந்து மன்னார்குடிக்கும், இயக்கலாம்.
பிறகு வழக்கம்போல் மன்னார்குடியில் இருந்து வண்டி எண் 16615 , செம்மொழி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கோவைக்கு இயக்கப்பட்டு, கோவையில் இருந்து போடிக்கு சென்று, அங்கிருந்து கோவை வந்தடையலாம்.
இதன் வாயிலாக, புனலுார் - -மதுரை, மதுரை -- வேளாங்கண்ணி, வேளாங்கண்ணி -- மன்னார்குடி, மன்னார்குடி - -கோவை, கோவை-- போடி என பல்வேறு வழித்தடங்களில், ரயில்களை இயக்கினால், பொதுமக்கள், தொழில் துறையினருக்கு பயனுள்ளதாக அமைவதோடு, ரயில்வேத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
மேலும்
-
குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்