சீமானுக்கு மதுபிரியர்கள் எதிர்ப்பு

தேனி தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் சீமானுக்கு எதிராக மதுபிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி வேட்பாளர் நா.த.க., வேட்பாளர் கோமதிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓட்டு சேகரித்து பேசினார். தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் டாஸ்மாக்கை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்களே, ஒழித்தார்களா என கேள்வி எழுப்பினார். மேலும் மக்களை போதைக்கு அடிமையாக்கி அதில் வரும் வருமானத்தை வைத்து நாட்டை வளர்க்கிறேன் என்று கூறுவது சரியா என பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் நின்றிருந்த மதுபிரியர்கள் இருவர், எங்கள் தலைவரை பற்றி நீ எப்படி பேசலாம். மைக்க ஆப் செய்... என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சீமான், இதுபோன்ற குடிகாரர்களை உருவாக்குவதை தவிர இந்த அரசுகள் வேறு என்ன செய்தது என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement