கூட்டணி தர்மத்தை மதியாத அ.தி.மு.க.,வினர் உதாசீனப்படுத்துவதாக அ.ம.மு.க.,வினர் புலம்பல்
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை மற்றும் பர்கூர் தொகுதியில், கூட்டணி தர்மத்தை மதிக்காமல், அ.தி.மு.க.,வினர் தங்களை உதாசீனப்படுத்துவதாக, அ.ம.மு.க.,வினர் புலம்புகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி
யில் அங்கம் வகிக்கும் அ.ம.மு.க.,வினர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பணியாற்றி வந்தனர். குறிப்பாக, ஊத்தங்கரை மற்றும் பர்கூர் சட்ட
சபை தொகுதிகளில், மாவட்ட செயலாளர் முதல், கீழ்மட்ட தொண்டர்கள் வரை களப்பணியாற்றி வந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க., தரப்பிலிருந்து தங்களுக்கு முறையான மரியாதையோ, அங்கீகாரமோ வழங்கவில்லை என, அ.ம.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் கணேசகுமார், பகிரங்கமாக தன் வருத்தத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், வேட்பாளர் அறிமுக கூட்டம், வேட்புமனு தாக்கல் மற்றும் இ.பி.எஸ்., பங்கேற்ற பொதுக்கூட்டம் என எதற்கும், அ.ம.மு.க.,வினருக்கு முறையான அழைப்பு இல்லை. இது குறித்து அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் அசோக்குமார் மற்றும் வேட்பாளர்களிடம் பலமுறை முறையிட்டும், எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி தர்மத்தை மதிக்காமல், அ.தி.மு.க.,வினர், அ.ம.மு.க., நிர்வாகிகளை தவிர்த்து விட்டு, தனித்தே செயல்படுவதாகவும், ஓட்டு கேட்க செல்லும்போது, தங்களை அழைப்பதில்லை என்றும் புலம்பி வருகின்றனர். இந்த புறக்கணிப்பு செயல், கட்சிக்கும், தொண்டர்களுக்கும் அவமானம் இழைப்பதாக, அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் கணேசகுமார் தெரிவித்துள்ளார்.
விரைவில் ஊத்தங்கரை, பர்கூர் தொகுதி, அ.ம.மு.க., மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இதில், அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது தேர்தல் பணியில் ஈடுபடாமல் ஒதுக்கி கொள்வதா என, முடிவெடுக்க உள்ளதாக அக்கட்சியினர் கூறினர்.
மேலும்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்