குன்னூரில் பூகுண்டம் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், பூ குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று இரவு, வி.பி., தெரு மார்க்கெட் பகுதியில் பூகுண்டம் திருவிழா நடந்தது. முன்னதாக தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.
இதில் பக்தர்கள் சாட்டையில் அவர்களையே அடித்து கொண்டு, நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர்.
ஜாதி, மத பேதமின்றி, பல்லாயிரக்கணக்கான மக்கள், உப்பு வீசி நேர்த்திகடன்களை செலுத்தினர். ஏற்பாடுகளை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ சங்கத்தினர், உபயதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
வி.பி., தெரு, வினாயகர் கோவில் உட்பட பல இடங்களிலும் தன்னார்வ அமைப்பினர் சார்பில், அன்னதானம், வழங்கப்பட்டது. விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பில், கூட்ட நெரிசலை தவிர்க்க எல்.சி.டி., வைக்கப்பட்டு பக்தர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இலவச மோர்பந்தல் அமைக்கப்பட்டது. இன்னிசை கச்சேரி நடந்தது. முக்கிய தேரோட்டம், 17ம் தேதி முத்துப்பல்லக்கு, 18 ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது. மே 8ம் தேதி, மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
மேலும்
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை
-
துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு