வேப்பூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி வாக்குறுதி

விருத்தாசலம்: ஆட்சி மாற்றம் வந்தால், வேப்பூர் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த சட்டசபையில் குரல் கொடுப்பேன் என பா.ம.க., வேட்பாளர் தமிழரசி உறுதியளித்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த நல்லுார் ஒன்றியத்தில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி ஓட்டு சேகரித்தார். அப்போது, நல்லுார் ஒன்றியத்தில் உள்ள வேப்பூர், சிறுநெசலுார், அம்பேத்கர் நகர், அய்யனார் பாளையம், செல்லியம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், நல்லுார் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை சரி செய்வேன். இப்பகுதியில் மருத்துவ கல்லுாரி, தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன். ஆட்சி மாற்றம் ஏற்படால், வேப்பூர் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த சட்டசபையில் குரல் கொடுப்பேன் என கூறி, மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டுகேட்டு துண்டு பிரசுரம் வழங்கினார்.

உடன் அ.தி.மு.க., மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், நல்லுார் ஒன்றிய செயலர் பச்சமுத்து, பா.ம.க., மாவட்ட செயலர் கார்த்திகேயன், ஐ.ஜே.கே., பார்த்தசாரதி, பா.ம.க., ஊடக பிரிவு செல்வா, வினோத், தமிழ் மற்றும் பா.ம.க., - அ.தி.மு.க., - தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement