ஹாக்கி: சாதிக்குமா இந்தியா
பியுனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவுக்கு எதிரான ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை, ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் விதமாக அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நான்கு போட்டிகள் (ஏப். 13, 14, 16, 17, இடம்: பியுனஸ் ஏர்ஸ்) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று நடக்கிறது.
அம்மை நோயில் இருந்து மீண்டு வரும் இந்திய அணி கேப்டன் சலிமா, இத்தொடரில் இருந்து விலகியது பின்னடைவு. இவருக்கு பதிலாக, நவ்னீத் கவுர் அணியை வழிநடத்த உள்ளார். பத்து மாதங்களுக்கு பின், அனுபவ கோல்கீப்பர் சவிதா புனியா அணிக்கு திரும்பியது பலம். இவருக்கு மாற்றாக பிச்சு தேவி அணியில் இடம் பெற்றுள்ளார்.
சமீபத்தில் 200வது போட்டியில் விளையாடிய நிக்கி பிரதான், சுஷிலா சானு, தீபிகா, பல்ஜீத் கவுர், மும்தாஜ் கான், இஷிகா சவுத்ரி, மணிஷா சவுகான், ஜோதி, உதிதா, ருதுஜா, சாக் ஷி ராணா, பியூட்டி டங்டங், வைஷ்ணவி உள்ளிட்டோர் கைகொடுத்தால், தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.
அர்ஜென்டினா அணி சொந்த மண்ணில் களமிறங்குவது பலம். இது, இந்திய வீராங்கனைகளுக்கு சவாலாக அமையலாம்.
மேலும்
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்