தேர்தல் பிரசாரத்தில் வானதி மகன்கள்
பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதியின் இளைய மகன் கைலாஷ், அரசியலில் களமிறங்கியுள்ளார்.
தற்போது, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் வானதி, இந்த தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் இருந்த அவருக்கு, கடந்த 10ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை வடக்கு தொகுதியில் வேட்பாளர் இல்லாமலேயே, பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். வானதி இல்லாத குறையைப் போக்கும் வகையில், வானதியின் மகன்கள் ஆதர்ஷ் மற்றும் கைலாஷ், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் இளைய மகன் கைலாஷ், தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
நம் நாளிதழுக்கு, கடந்த மாதம் 28ம் தேதி பேட்டி அளித்த வானதி, தனது இளைய மகனுக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார். வானதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருப்பதால், அவரது மகன் முழுநேரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு