ஈரோட்டில் 3 இடங்களில் தீ விபத்து
ஈரோடு : ஈரோட்டில், 12 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து, 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோடு பா.தண்ணீர்பந்தல் பாளையத்தில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பழைய ஆயில் சேகரிக்கும் குடோன் உள்ளது. அதன் அருகே குப்பைக்கு அடையாளம் தெரியாத நபர் நேற்று முன்தினம் மதியம் தீ வைத்ததாக தெரிகிறது. தீ காற்றில் பரவி அருகில் உள்ள காய்ந்த, செடி கொடிகளுக்கும், ஆயில் குடோனில் சேகரித்து வைத்திருந்த ஆயில் பேரல்களிலும் தீப்பிடித்து எரிய துவங்கியது. ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சென்றனர். முன்னதாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். 4 பேரல்களில் சேகரிக்கப்பட்டிருந்த ரூ.8,000 மதிப்பிலான ஆயில் தீயில் எரிந்ததாக தெரிவித்தனர்.
* ஈரோடு, ஈ.வி.என். ரோடு பெரியார் நகர் நுழைவு வாயில் பகுதியில் கார்த்திக் என்பவர், கணினி மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென ஏ.சி. தீப்பிடித்தது. இதையடுத்து ஈரோடு தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மின் கசிவே தீ விபத்துக்கான காரணம் என தெரியவந்தது.
* ஈரோடு சென்னிமலை சாலை கே.கே. நகர் அருகே, ராயல் பாஸ்ட் புட் கடை உள்ளது. மின் கசிவு காரணமாக கடையின் முன்புறம் இருந்த கூரையில் தீப்பிடித்து, நேற்று அதிகாலை 12:50 மணியளவில் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த பொருட்கள் தீக்கிரையாகின.
12 மணி நேரத்துக்குள் ஈரோட்டில் அடுத்தடுத்து, 3 இடங்களில் தீப்பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு