தாகூரை கண்டுக்காத காங்., வேட்பாளர்
'தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு வேண்டும்' என, சர்ச்சையை ஏற்படுத்திய விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூரை தி.மு.க., தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஸ்டாலினின் விருதுநகர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அவர் அழைக்கப்படவில்லை. இருப்பினும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியாற்றும்படி, தன் ஆதரவாளர்களுக்கு மாணிக்கம் தாகூர் உத்தரவிட்டார்.
ஆனால், சிவகாசி தொகுதி காங்., வேட்பாளர் அசோகன் தரப்பு, மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்களை புறக்கணித்து வருகிறது. தொகுதி தேர்தல் தலைமை அலுவலகத்தில், மாணிக்கம் தாகூர் படம், பெயர், பேனர்களில் இடம் பெறவில்லை. தி.மு.க.,வின் உத்தரவுபடி அசோகன் தரப்பு செயல்படுவதாக காங்., தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து, கட்சி மேலிடத்திற்கு புகாரும் அனுப்பியுள்ளனர்.
மேலும்
-
ரூ.60 லட்சம் நிலமோசடி : உறவினர்கள் இருவர் கைது
-
மக்களுடன் நிற்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே: தி.நகர் சத்யா
-
தலையில் விழுந்த குடம்: நனைந்த தி.மு.க., நிர்வாகிகள்
-
வார்டு தோறும் மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்: தமிழிசை
-
குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடும் சூழலை ஏற்படுத்தி தருவேன்: கார்த்திக் மோகன் உறுதி
-
வாரத்தின் ஏழு நாட்களும் எம்.எல்.ஏ., ஆபீஸ் இயங்கும் :அ.தி.மு.க.,- கந்தன் உத்தரவாதம்