கேள்வி மேல் கேள்வி

@block_B@ கேள்வி மேல் கேள்வி

1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான் பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு போன் போட்டு பேசுகிறாராம். 'என் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் என்ன ரியாக்ஷன்? நான் பேசியதெல்லாம் மக்களிடம் சென்றடைந்ததா? வேறு எதுவும் புதிதாக, சேர்த்து பேச வேண்டுமா? அப்படி ஏதும் பேச வேண்டும் என்றால் என்ன பேச வேண்டும்?' என்றெல்லாம் வரிசையாக கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில் பெறுகிறாராம்.block_B

@block_Y@ வியூக டீம் யோசனை

2. 'வழக்கமான தேர்தல் பிரசாரம் போர் அடிக்கிறது. பிரசாரம் செய்ய ஏதேனும் புதிய முறை இருந்தால் சொல்லுங்கள்' என, கட்சியின் மூத்த தலைவர்களிடம் யோசனை கேட்டாராம் சூரிய கட்சித் தலைவர். 'வியூக வகுப்பு டீமிடம் கேளுங்க தலைவரே... நல்ல யோசனை வரலாம்' என தலைவர்கள் சொல்ல, அதன்படியே யோசனை கேட்கப்பட்டதாம். அப்படி கிடைத்த யோசனை படிதான், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, சூரிய கட்சித் தலைவர் பிரசாரம் மேற்கொண்டாராம்.block_Y

@block_G@ தயங்கும் தலைகள்

3. தாமரை கட்சியில் ஆறு முறைக்கும் மேல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தெற்கத்திய பெண்மணி, இம்முறையும் சென்னையில் போட்டியிடுகிறார். அவருக்கு இம்முறை சீட் கொடுத்ததில், கட்சியின் மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை யாருக்குமே பிடிக்கவில்லையாம். அதனால், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் அவருக்காக பிரசாரத்துக்கு செல்ல தயங்குகின்றனராம். இசையான அந்த பெண்மணி வேண்டி கேட்ட பிறகும் தலைவர்கள் புறக்கணிக்கின்றனராம்.block_G

@block_P@ துாய்மை பணி

4. விசில் கட்சித் தலைவர் போகும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் குஷியான தலைவர், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களை அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, 'நாம எப்படியும் ஆட்சிக்கு வந்துடுவோம். ஆனால், கட்சியின் பிரசாரத்துக்கு வரும் கூட்டத்தினர், ஏராளமாக குப்பை போட்டுச் செல்கின்றனர்; இது சரியில்லை. கூட்டம் முடிந்ததும், அதை அப்புறப்படுத்தணும்' என உத்தரவிட, அதன்படியே ஊரை கூட்டி துாய்மை செய்கின்றனராம்.block_P

@block_B@ காக்கிகளுக்குள் மோதல்

5. தேர்தல் கமிஷன் உத்தரவை அடுத்து, காவல் துறையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராயானவர், புதிய தலைமை செயலரை சந்திக்கப் போனாராம். அப்போது, காவல் துறையின் ஆசிர்வாத உயர் அதிகாரி அங்கிருந்திருக்கிறார். அப்போது, இரு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 'தேர்தலுக்கு சூரிய கட்சிக்கு நீ எப்படி உதவுகிறாய் என பார்க்கிறேன்' என்று ராயானவர் சொல்ல, 'உங்களால் முடிந்ததை பாருங்கள்' என ஆசிர்வாத அதிகாரி கொந்தளித்தாராம்.block_B

@block_G@ நீங்களே தட்டி விடுங்க

6. 'விசில் கட்சித் தலைவர் தங்களுடைய கூட்டணிக்கு வரவில்லை என்றால் என்ன, தல நடிகரையும் ரசிகர்களையும் எப்படியாவது தங்கள் பக்கம் திருப்புங்கள். அவரோடு பேசி சம்மதிக்க வைப்பதெல்லாம் இயலாத காரியம். நீங்களாகவே அவருடைய ஆதரவு இருப்பது போல, நாலா பக்கமும் செய்திகளை பரப்பி விடுங்கள். தல ஆதரவு நமக்கு இருப்பது போல தெரிந்தாலே, அவருடைய ஆதரவாளர்கள் நமக்கு ஓட்டு போடுவார்' என, இலை கட்சி தலைவர் உத்தரவிட, அதன்படியே செய்தி பரப்பப்படுகிறதாம்.block_G

Advertisement