காப்புரிமை விண்ணப்பங்கள் முதலிடம் பிடித்த தமிழகம்

புதுடில்லி: இந்தியாவில், கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பீயூஷ் கோயல் நேற்று கூறியதாவது:

நம் நாட்டில் புதுமை கண்டுபிடிப்புகள் வேகமெடுத்து வரும் நிலையில், கடந்த 2025 - 26ம் நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,43,729 காப்புரிமைகளுக்கு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டை விட 30.2 சதவீதம் அதிகம். அப்போது இந்த எண்ணிக்கை 1,10,375 ஆக இருந்து.

மாநில வாரியாக பார்க்கும்போது, கடந்த நிதி ஆண்டில் தமிழகமே அதிக காப்புரிமை விண்ணப்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து கர்நாடக, மஹாராஷ்டிர மாநிலங்கள் உள்ளன.

பஞ்சாப், உத்தர பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிஉள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement