பைக் - லாரி மோதி ஒருவர் படுகாயம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 36. இவர், ஆர்.கே.பேட்டையில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பலிஜிகண்டிகையில் உள்ள கோழி இறைச்சி கடைக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே.பேட்டைக்கு சென்று கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சண்முகம், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement